Author: S. John Barathi Appears in 1 hymnal First Line: தூதர் வாழ்த்தி பாடிப் போற்றினரே Refrain First Line: ஆனந்த களிப்பாய் நாம் பாடுவோம் Lyrics: 1 தூதர் வாழ்த்தி பாடிப் போற்றினரே,
மேய்பர் வயல்வெளிகளில் காத்து நிற்க
தம் மந்தையை இரவின் குளிரில்
மிக ஏழை எளிய மக்களாமே,
பல்லவி:
ஆனந்த களிப்பாய் நாம் பாடுவோம்
நம் இஸ்ரவேலின் ராஜனை.
2 விண்ணில் நோக்கிப்பார்க்க மின்னும்
நட்சத்ரமே, தூர கிழக்கில் அதோ
ப்ரகாசிக்குதே,பூமியின்மேல் ஓர்
பேரொளியாய் இரவும் பகலும்
தோன்றி நின்றதே, [பல்லவி]
3 அதோ நட்சத்ரம் ஒளிகாட்டிடவே,
மூன்று ஞானியர் தூர தேசம் முதல்
தாங்கள் தேடி வரும் கோவை கண்டிடவே,
அதை பின் சென்று தொடர்ந்தே வந்தனரே, [பல்லவி]
4 விந்தை அந்த நட்சத்ரம் தென்மேற்கில்
சென்று, பெத்லகேமின் சிற்றூரில் ஓய்ந்ததே,
அங்கேயே தங்கி எங்கும் செல்லாமலே,
இயேசு பாலன் பிறந்த இடம் நின்றதே, [பல்லவி]
5 அவ்விடம் அடைந்து அம்மூவருமே,
மிக பக்தியாய் சாஷ்டாங்கமாய் விழுந்து,
பொன்னும் வெள்ளைப்போளமும்
தூபவர்க்கமும் படைத்தே மகிழ்ந்தனர்
நல் ஞானியரும். [பல்லவி] Used With Tune: [தூதர் வாழ்த்தி பாடிப் போற்றினரே] Text Sources: Traditional English carol
ஆனந்த களிப்பாய் நாம் பாடுவோம்