Hymnary.org will be unavailable February 11 (8PM-12AM EST) and February 12 (8PM-11PM EST) for system maintenance. Thank you for your patience.
Hide this message
15833 | The Cyber Hymnal#15834 | 15835 |
Text: | வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன் |
Author: | R. Kelso Carter |
Translator: | S. John Barathi |
Tune: | [கிறிஸ்து ராஜன் வாக்குத்தத்தம்] |
Composer: | Russel Kelso Carter |
Media: | MIDI file |
1 கிறிஸ்து ராஜன் வாக்குத்தத்தம்
நம்பி நிற்கிறேன்,
சதா காலம் அவர் புகழ்
எங்கும் ஒலிக்க,
உன்னதத்தில் மகிமை நான்
உயர்த்தி பாடுவேன்,
வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன்.
பல்லவி:
நம்பி நின்றேன்
மீட்பர் இயேசு வாக்குத்தத்தம்
என்றும் உண்மை,
நம்பி நிற்பேன், என்
மீட்பர் இயேசு வாக்குத்தத்தமே.
2 என்றும் வாக்கு மாறாதந்த
வாக்குதத்தமே,
அவிஸ்வாசம் சந்தேகமும்
வந்து சூழ்ந்தாலும்,
அவர் உண்மை வார்த்தை ஒன்றும்
என்றும் மாறாதே,
வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன். [பல்லவி]
3 நம்பி நின்ற வாக்குத்தத்தம்
நன்று காண்கிறேன்,
என்னையவர் கழுவி சுத்திகரித்தாரே
கட்டவிழ்த்து விடுவித்த
கிறிஸ்து அவரே,
வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன். [பல்லவி]
4 கிறிஸ்து எந்தன் ஆண்டவரே
தந்த வார்த்தையே,
அன்பாய் என்னை கட்டி சேர்த்து
நித்ய வாழ்வுக்காய்,
நித்தம் அவர் தூய ஆவி
சக்தி கொண்டு நான்
வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன். [பல்லவி]
5 என்றும் நான் விழாமல் காக்கும்
வாக்குதத்தமே,
சொல்லும் பரிசுத்தாவி நான்
கேட்டு நிற்கிறேன்.
மீட்பர் மீது நம்பி சார்ந்தேன்,
எல்லாம் அவரே,
வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன். [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | கிறிஸ்து ராஜன் வாக்குத்தத்தம் |
Title: | வாக்குத்தத்தம் நம்பி நிற்கிறேன் |
English Title: | Standing on the promises of Christ my king |
Author: | R. Kelso Carter |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | நம்பி நின்றேன் |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [கிறிஸ்து ராஜன் வாக்குத்தத்தம்] |
Composer: | Russel Kelso Carter |
Key: | B♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |