15628. உம் கரத்தில், உண்மையின் ஆண்டவா

1 தந்தேனிப்போ என் ஆன்மாவை,
உண்மையின் ஆண்டவா,
காத்தே என்னை மீட்டீர் நீரே,
சாவினின்று தூக்கி.

2 என் ஏக்கமும் என் பயமும்,
வந்தேகும் குழப்பமும்,
வேதனை பாவம் வியாகுலம்,
மாய்த்தென்னை வீழ்த்துதே.

3 என் காலம் உம் கைகளிலே,
நான் மண்ணாய் போனாலுமே,
ஒளிந்தே நான் வரும் இடம்,
கர்த்தாவே உம்மிடம்.

4 என் மீது வீச காண்பியும்
உம் ரூபம் அடியேன்மேல்,
கிருபையாலே நீர் மீட்டிடும்,
நான் உம்முடையோனே.

5 விரைந்தே சிந்திக்காமலே,
சாவேனென்றெண்ணினேன்,
உம் கண்முன்னே காணாமலே,
ஆனாலும் கேட்டீரே.

6 இலவசம் உம் கிருபையே,
உம் தயை விந்தையே,
பயத்துடன் உம் சமூகம்
வந்தேன் வாக்கை நம்பி.

7 நேசிப்போம் நாமும் உண்மையாய்,
ஆம் பாடி போற்றியே,
நம் வேண்டல் யாவும் கேட்டவர்,
தயவாய் ஈவாரே.

Text Information
First Line: தந்தேனிப்போ என் ஆன்மாவை
Title: உம் கரத்தில், உண்மையின் ஆண்டவா
English Title: Into Thine hand, O God of truth
Author: Isaac Watts
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [தந்தேனிப்போ என் ஆன்மாவை]
Composer: Hugh Wilson
Key: G Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us