1 நீரோடை போலமைதியாய்,
பாயும் கடல் நோக்கியே,
அவர் அன்பு பாயும் என்னை நோக்கி
என்றும் விடாமல் அவர் அன்பு,
பல்லவி:
அமைதியாய் பாயும் தாழ்மாய்,
அவர் அன்பு என்னை நோக்கி,
பாயும் நதி போல என்றும் விடாமலே
அவர் அன்பு என் மீது.
2 அவர் நேசித்திடும் பிள்ளைமேல்,
என்றும் பயம் இல்லையே,
கண்ணீர் துடைத்தன்பாகவே
என்றும் அவர் நடத்துகிறார், [பல்லவி]
3 உள்ளத்தில் அமைதி தந்து,
ஆம் ஆழ்கடல் போலவே,
என் உள்ளம் அன்பாய் மகிழ்ந்தே
என்றும் இன்பமாக பாடியே, [பல்லவி]
4 சூரியன் மறையும் அமைதி,
மேகங்களுக்கப்பாலே,
சூராவளி செல்லுமே
நான் தேடும் அமைதி தருவார், [பல்லவி]
Source: The Cyber Hymnal #15772