1 சூரியனுடன் விழித்தெழு
அன்றன்றுள்ள வேலை நீ செய்,
சோம்பல் தள்ளி உற்சாகமாய்,
இந்நாள் பங்கை செய் பலியாய்.
2 உன் காலம் நேரம் காப்பாயே,
ஒவ்வொரு நாளும் வெகுமதி,
உன் தாலந்தை வளர்த்திடு,
அந்நாளுக்காய் உன்னை காப்பாய்.
3 சம்பாஷணையில் தூய்மையாய்,
உன் மனசாட்சி தெளிவாய்,
உன் உள், புரம் காண்பார் தேவன்,
உன் சிந்தை அவர் காண்கிறார்.
4 விழித்தெழு என் மனமே,
தூதரின் கீதம் சேர்ந்திடு,
இரா பகலாய் அழைக்கிறார்,
இராஜாவாய் என்றும் ஆள்பவர்.
5 பாடகர்க்குழாம் நீர் எழுவீர்,
உம் பக்தி பண் நீர் எழுப்ப,
நான் உம்மைப்போல் என் வாழ்விலே,
ஆராதித்தே நான் கழிப்பேன்.
Source: The Cyber Hymnal #15572