Author: Mary D. James; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15653 Refrain First Line: என் யாவும் வைத்தேன் உம்மிடம், Lyrics: 1 என் ஆவி ஆன்மதேகம்,
தந்தேன் என் இயேசுவே,
என் நேர்த்தி காணிக்கையே,
என்றும் அதுமது,
பல்லவி:
என் யாவும் வைத்தேன் உம்மிடம்,
நான் காத்து நிற்கிறேன்,
இன்னும் இன்னும் நான்,
நீர் அபிஷேகித்திட.
2 மா வல்ல மீட்பர் நீரே,
நான் நம்புகிறேன் உம்மை,
உம் இரட்சிப்பிற்காய் காத்து,
உம் வாக்கு நோக்கியே, [பல்லவி]
3 இப்போதே உந்தன் ஆவி,
என் உள்ளம் ஊற்றுமே,
என் காணிக்கை நீர் ஏற்று,
நீர் தூய்மையாக்குமே, [பல்லவி]
4 நான் உந்தன் பிள்ளையன்றோ,
நீர் தூய்மையாக்கினீர்,
உம் ஆவி என்னில் ஊற்றி,
ஓர் ஜீவ பலியாய். [பல்லவி] Languages: Tamil Tune Title: [என் ஆவி ஆன்மதேகம்]
என் ஆவி ஆன்மதேகம்