Author: James Chadwick; S. John Barathi Hymnal: The Cyber Hymnal #15740 Refrain First Line: ஆ ஆர்ப்பரிப்போம் ஆ ஆர்ப்பரிப்போம் Lyrics: 1 தூதர் பாடல் வானிலே, கேட்கும் இன்ப கீதமே,
எதிரொலிக்கும் மலைகளே, பேரின்ப நற்செய்தியே,
பல்லவி:
ஆ ஆர்ப்பரிப்போம் ஆ ஆர்ப்பரிப்போம்
ஆ ஆர்ப்பரிப்போம் ஆனந்தம்,
உன்னதத்தில் மகிமை.
ஆ ஆர்ப்பரிப்போம், ஆ ஆர்ப்பரிப்போம்
ஆ ஆர்ப்பரிப்போம் ஆனந்தம்
உன்னதத்தில் மகிமை
2 மேய்ப்பரே, ஏன்? ஆனந்தம், மென்மேலும் ஏன்? ஓங்குதே?
என்ன செய்தி கேட்டிந்த, ஆர்ப்பரிப்பில் ஆழ்ந்தீரோ? [பல்லவி]
3 பெத்லேமுக்கு வாருங்கள், தூதர் பாடல் கேளுங்கள்,
பணிந்து குனிந்து வணங்கியே, துதித்து போற்றி பாடுங்கள். [பல்லவி]
4 முன்னணையில் தவழ்ந்திடும் சின்ன ராஜ பாலனை,
யோசேப்பும் மரி அன்னையும் அன்பாய் அரவணைக்கவே. [பல்லவி] Languages: Tamil Tune Title: [தூதர் பாடல் வானிலே, கேட்கும் இன்ப கீதமே]
தூதர் பாடல் வானிலே, கேட்கும் இன்ப கீதமே