15772 | The Cyber Hymnal#15773 | 15774 |
Text: | நேர்த்தியை காண கூடுமோ? |
Author: | Isaac Watts |
Translator: | S. John Barathi |
Tune: | [நேர்த்தியை காண கூடுமோ] |
Composer: | Robert Henry Earnshaw |
Media: | MIDI file |
1 நேர்த்தியை காண கூடுமோ,
படைப்பில்லா கர்த்தர் ஞானமே,
படைப்பின் ஞானம் காணுமோ?
ஆண்டவர் ஆற்றல் யாவுமே.
2 அறியா ஆழம் உயரமும்,
மாளும் யாம் மாந்தர் அறிவோமோ?
வானின்று மேலும் உயரமே,
மின்னிடும் மேகம் மேலுயர்ந்தே.
3 மானுடன் வீணாய் தான் ஞானி என்றே,
எண்ணினும் தான் அற்ப விலங்கன்றோ?
மூடத்தனம் அவன் சிந்தை,
வெறும் காற்றன்றி வேறில்லை.
4 ஆண்டவர் வல்லமை யாரறிவார்,
திண்ணமாம் அவரின் வாக்குத்தத்தம்,
அவர் செய்கை யார் எதிர் சொல்வார்,
என்ன ஏதென்று யாரறிவார்.
5 உள்ளத்தின் காயங்கள் ஆற்றி அவர்,
மனப்புயல் சீற்றம் தணிப்பாரே,
துயரம் தன் கதவடைத்தால்,
யார் திறப்பார் யாரால் கூடும்.
6 நிலவும் மங்கும் சீற்றம் கண்டால்,
பகலில் சூர்யனும் இருளுமே,
அதிரும் விண்ணின் தூண்களும்,
ஆண்டவர் சொல்ல நடுங்குமே.
7 விண்ணுலகம் அவர் கைபடைப்பு,
சர்பங்களும் சிறு புழு பூச்சும்,
துன்பங்கள் தீர்ப்பார் சுவாஸத்தால்,
பெருமை கொண்டோர் மாய்ந்திடுவர்.
8 இவைகள் சில அவர் வழிகள்,
அவர் முகபாவம் யார் அறிவார்,
அவர் ஒளி முன்னே நிற்பவன் யார்?
அவர் கை மின்னல் முழக்கம்.
Text Information | |
---|---|
First Line: | நேர்த்தியை காண கூடுமோ |
Title: | நேர்த்தியை காண கூடுமோ? |
English Title: | Can creatures to perfection find |
Author: | Isaac Watts |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [நேர்த்தியை காண கூடுமோ] |
Composer: | Robert Henry Earnshaw |
Key: | F Major or modal |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |