15713 | The Cyber Hymnal#15714 | 15715 |
Text: | குன்றிப்போகா விஸ்வாசமே |
Author: | William H. Bathurst |
Translator: | S. John Barathi |
Tune: | ST. AGNES |
Composer: | John Bacchus Dykes |
Media: | MIDI file |
1 குன்றிப்போகா விஸ்வாசமே,
சூழ்ந்தேகும் யாராலும்,
விளிம்பில் நடுங்கி சாயாமல்
நின்றேகும் பூவினில்.
2 புலம்பிடாதே காத்திடும்,
கண்டிக்கும் கோலண்டை,
துக்கத்துன்பம் வருங்காலை
அண்டுமவர் பாதம்.
3 பிரகாசிக்கும் மா தெளிவாய்,
சோதனை நேரமே,
ஆபத்திலே அதஞ்சாமல்
இருளின் போதிலும்.
4 உலகின் சீற்றம் மூழ்காதே,
இன்ப மகிழ்ச்சியும்,
பாவ கடலிலும் மூழ்காதே
எப்பேராற்றலுமே.
5 இருளிலும் சந்தேகியா,
கடின பாதையில்,
முடிவின் காலம் தாங்குமே
மெய்யொளி விஸ்வாசம்.
6 தாரும் இவ்வாராம் விஸ்வாசம்,
என்ன நேர்ந்தாலுமே,
ருசிப்போம் மெய் சமாதானத்தின்
இன்பம் விண்வீட்டிலே.
ஆமேன்
Text Information | |
---|---|
First Line: | குன்றிப்போகா விஸ்வாசமே |
Title: | குன்றிப்போகா விஸ்வாசமே |
English Title: | O for a faith that will not shrink |
Author: | William H. Bathurst |
Translator: | S. John Barathi |
Meter: | CM |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | ST. AGNES |
Composer: | John Bacchus Dykes (1866) |
Meter: | CM |
Key: | G Major or modal |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |