Go Ad-Free
If you regularly use Hymnary.org, you might benefit from eliminating ads. Consider buying a Hymnary Pro subscription.
15704 | The Cyber Hymnal#15705 | 15706 |
Text: | கிறிஸ்துவின் மேல் விஸ்வாசத்தால் |
Author: | John Newton |
Translator: | S. John Barathi |
Tune: | [கிறிஸ்துவின் மேல் விஸ்வாசத்தால்] |
Composer: | Robert Henry Earnshaw |
Media: | MIDI file |
1 கிறிஸ்துவின் மேல் விஸ்வாசத்தால்,
விண்வீடு தோன்ற நடந்து,
அவர் கோல் தடியும் நடத்த,
இனிமையான பாதையில்.
2 பாலைவனமே ஆயினும்,
திக்கற்று நான் சுற்றினாலும்,
திட்டமாய் என்னை கைவிடார்,
என் வழியை தப்பவிடார்.
3 ஆபத்தான கண்ணி வழி,
வழி தப்பேன் நான் எவ்வாரேனும்,
விஸ்வாசத்தாலே ஜெயம் கொள்வேன்
வல்லக்கரம் நடத்தவே.
4 காடு வனாந்திரமாயினும்,
போஷித்தே என்னை நடத்துவார்,
தேவையாவும் சந்தித்தே என்னை,
திருப்தியுடன் நடத்துவார்.
5 இன்ப சம்பாஷணை செய்தே,
முற்றிலும் வேதனையின்றி செல்ல.
எந்தன் பாரம் துன்பங்களும்,
சொல்லிடுவேன் அன்பாய் கேட்ப்பார்.
6 அவர் வார்த்தை என்னைத்தேற்றும்,
எந்தன் ஆன்மா சோர்ந்த நேரம்,
தெளிந்தே நான் நல் கீதம் பாட,
சோர்ந்து சாய என்னைக்காப்பார்.
7 உலகின் மாயா ஜாலமே,
சட்டென்றவை விட்டோடுமே,
உம்முடன் நான் நடப்பேனே,
காவலன் எந்தன் நண்பன் நீர்.
Text Information | |
---|---|
First Line: | கிறிஸ்துவின் மேல் விஸ்வாசத்தால் |
Title: | கிறிஸ்துவின் மேல் விஸ்வாசத்தால் |
English Title: | By faith in Christ I walk with God |
Author: | John Newton |
Translator: | S. John Barathi |
Meter: | L.M. |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [கிறிஸ்துவின் மேல் விஸ்வாசத்தால்] |
Composer: | Robert Henry Earnshaw |
Meter: | L.M. |
Key: | F Major or modal |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |