15697. கனிவான கர்த்தரே நீர் தாய்க்குலத்தை உயர்த்தினீர்

1 கனிவான கர்த்தரே நீர்
தாய்க்குலத்தை உயர்த்தினீர்,
நீரும் தாயின் பிள்ளையன்றோ,
தந்தையின் ஏக மைந்தனாம்,
பெண்மையை நீர் இன்றுமே,
அபிஷேகித்தருளும்.

2 இயேசுவே நீரும் மகன்தான்,
தாய்களுக்காசீர் தாரும்,
எங்கள் பிள்ளைகளை நாங்கள்,
உம் அண்டைக்கே நடத்த,
மகன் மகள்களுமே,
உமக்காய் அர்ப்பணிக்க.

3 நீரும் அன்று யோசேப்புடன்,
எளிமையாய் உழைத்தே,
யாமும் உம்மை பின்பற்றியே,
பொறுமை யாய்த்துன்பத்திலும்,
எங்கள் இல்ல வாழ்விலும்,
உம்மில் வாழ செய்திடும்.

4 துக்கத்தோடே நீர் நடந்து,
எம்மை மீட்க சகித்து,
எம்மை நீர் உம் அண்டை சேரும்,
வெறுத்தே யாம் தள்ளினும்,
எளிமையாம் எம் வாழ்வு,
உம் கீர்த்திக்காய் ஏற்றிடும்.

Text Information
First Line: கனிவான கர்த்தரே நீர்
Title: கனிவான கர்த்தரே நீர் தாய்க்குலத்தை உயர்த்தினீர்
English Title: Gracious Savior, who didst honor
Author: Emily A. E. Shirreff, 1814-1897
Translator: S. John Barathi
Meter: 87.87.77
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [கனிவான கர்த்தரே நீர்]
Meter: 87.87.77
Key: C Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.