15692 | The Cyber Hymnal#15693 | 15694 |
Text: | கல்வாரி சிலுவையில் |
Author: | Sarah J. Graham |
Translator: | S. John Barathi |
Tune: | [கல்வாரி, சிலுவையில், நமக்காக, மரித்தாரே] |
Media: | MIDI file |
1 கல்வாரி, சிலுவையில், நமக்காக, மரித்தாரே,
தம் தூய இரத்தத்தையே, சிந்தியே,
நம்மை மீட்க, ஜீவ ஊற்றாய் பாய்ந்திடுதே,
பனி போல வெண்மையாய், எனக்காக
கல்வாரி மீதே, எனக்காய், ஆம் எனக்காய்,
பல்லவி:
கல்வாரியில் கல்வாரியில்,
எனக்காக, மரித்தாரே
ஆம் சிலுவையில் அன்று.
2 ஆ என்ன, விந்தையிது? அவர் பாதம்,
சேர்த்தாரென்னை, விந்தையான தெய்வன்பிதே,
என்னையே, அர்ப்பணிப்பேன், எந்தன் ஆவி
எந்தன் எல்லாம், முற்றும் தந்தேன் ஆம் மெய்யாய்,
எனக்காக, கல்வாரி மீதே, எனக்காய், ஆம் எனக்காய், [பல்லவி]
3 ஏற்றுக்கொள்ளும், என் இயேசுவே, என்றும் என்னை,
உம் பிள்ளையாய், நீரே என்றும் என் சொந்தமே,
என்னுடன், வாசம் செய்யும், பாவம். போக்கி
தூய்மையாக்கும், உந்தன் இரத்தம் சிந்தினீர்,
எனக்காக, கல்வாரி மீதே சிந்தினீர், உம் இரத்தமே, [பல்லவி]
4 சிலுவையில் தொங்கும் நேரம், இருள் மேகம்,
சூழ்ந்ததே, எல்லாம் முடிந்ததென்றார்,
தலை சாய்த்து ஜீவன் விட்டார். அவர்
ஜீவன் தந்ததினால், மனுக்குலம் மீண்டதே,
நமக்காக, கல்வாரி மீதே, சிந்தினார் தம் இரத்தமே [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | கல்வாரி, சிலுவையில், நமக்காக, மரித்தாரே |
Title: | கல்வாரி சிலுவையில் |
English Title: | On the cross of Calvary |
Author: | Sarah J. Graham |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | கல்வாரியில் கல்வாரியில் |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [கல்வாரி, சிலுவையில், நமக்காக, மரித்தாரே] |
Incipit: | 34556 12321 22116 |
Key: | B♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |