Hymnary.org will be unavailable February 11 (8PM-12AM EST) and February 12 (8PM-11PM EST) for system maintenance. Thank you for your patience.
Hide this message
15648 | The Cyber Hymnal#15649 | 15650 |
Text: | எவ்வாரே நான் பெற்றுக்கொண்டேன் |
Author: | Charles Wesley |
Translator: | S. John Barathi |
Tune: | SAGINA |
Composer: | Thomas Campbell |
Media: | MIDI file |
1 எவ்வாரே நான் பெற்றுக்கொண்டேன்,
என் மீட்பரின் மா தூய இரத்தத்தாலோ?
மாண்டார் எனக்காக, என்னால்தான்,
ஆம் தம் ஜீவன் எனக்காய் தந்ததேன்?
விந்தை இதே ஆம் விந்தையிலும் விந்தையே,
எனக்காக மரித்ததே விந்தையிலும்
விந்தை, அற்புதம், மா அற்புதம்
மா அற்புதம் மா அற்புதமிதே.
2 அனாதி தேவன் மரிப்பதுவோ?
அதாராய்ந்து அறியகூடுமோ?
போற்ற முயன்றாரே சேராபீம்,
அன்பின் ஆழத்தை பார் நீரே என்றோ?
கிருபையிதே பூவோர் போற்றி பாடி வாழ்த்தட்டும்,
மா கிருபையிதே கிருபையிதே தூதர்க்கும்
சந்தேகம் வேண்டாமே, மா கிருபையே
மா கிருபையே சந்தேகம் வேண்டாம்.
3 விந்தையாய் வான்லோகம் விட்டு,
ஒர் அளவில்லா அன்பாலே வந்தாரே,
தம் அன்பை வைத்து நம் மீதிலே,
ஆபிராமின் பிள்ளைகட்காகவே,
ஈடில்லா நன் கொடை ஈந்து என்னை தேடியே,
தம் இணையில்லா தயவாலே தேடி
என்னை தேடி வந்தாரே,என்னைத்தேடி,
என் தேவன் தேடியே வந்தாரே.
4 நான் நீண்ட நாள், கட்டுண்டு கிடந்தேன்,
கட்டுண்ட எந்தன் ஆன்மத்தை மீட்க்கவே,
பாவ இருளின் பிடி மீள, என் கண்களின் மீதே
ஒளி தோன்ற, மீண்டேன் நான் மீளா குகையினின்றே
மீண்டேனே, நான் கட்டவிழ்ந்தே
பறந்துள்ளம் பொங்கி உம்மை என்றும்
பின் சென்றேன் நான் மீண்டேனே
கட்டவிழ்ந்தே உம்மை பின் சென்றேனே.
5 இன்றும் அந்த சப்தம், கேட்க்குதே,
என் பாவம் முற்றும் அகன்றதென்றே,
என் அருகில் இன்னும் நின்றதே,
நான் விண்ணில் ஏகாவண்ணம் நிற்கையில்,
காயம் செய்யும் மாய விந்தை கண்டேன் மீட்பரே,
உம் காயம் செய்யும் விந்தை கண்டேன்
மீட்பரே நானே, என் மீட்பரே, நான் உணர்ந்தேன்
என் மீட்பரே எந்தன் உள்ளத்தில்.
6 சாபமெல்லாம் இனி இல்லை,
நான் உந்தன் சொந்தம் நீர் எந்தன் இயேசுவே,
உம்மிலே நீர் என்றும் என்னிலே,
நானும் நீதியின் வஸ்திரம் அணிந்தேன்,
வந்தேனிதோ நானும் உம் சமூகம் நானுமே,
என் ஜீவ கிரீடம் பெற்றிடவே உம் சமூகமே,
கிறிஸ்தேசுவே, நான் வந்தேனே
என் ஜீவ கிரீடம் பெறவே.
Text Information | |
---|---|
First Line: | எவ்வாரே நான் பெற்றுக்கொண்டேன் |
Title: | எவ்வாரே நான் பெற்றுக்கொண்டேன் |
English Title: | And can it be that I should gain |
Author: | Charles Wesley |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | SAGINA |
Composer: | Thomas Campbell |
Key: | G Major or modal |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |