15647 | The Cyber Hymnal#15648 | 15649 |
Text: | எல்லையில்லா எம் ஆண்டவா |
Author: | Isaac Watts |
Translator: | S. John Barathi |
Tune: | [எல்லையில்லா எம் ஆண்டவா] |
Composer: | William Croft |
Media: | MIDI file |
1 எல்லையில்லா எம் ஆண்டவா,
வெறும் புழுக்கள் யாம்,
படைப்புக்கள் எல்லோருமாய்
உம்மை போற்றுகின்றோம்.
2 உம் சிம்மாசனம் நின்றதே,
விண்மீன்கள் தோன்றுமுன்,
என்றும் வாழ்வீர் நீர் ஆண்டவா
எல்லோரும் மாண்டாலும்.
3 உம் முன்னே யாவும் மாயையே,
மகா மகத்துவம் நீர்,
பிரபஞ்சம் உருவாகும் முன்
தீ மாய்க்கும் நாள்வரை.
4 முன் பின்னான எக்காலமும்,
உம் கண்கள் முன்பன்றோ?
ஏதும் நீர் காணா காட்சியோ?
புதிதேதுமுண்டோ?
5 திகிலாம் எங்கள் வாழ்விலே,
சோர்ந்தே அயர்ந்தோமே,
உம் ஞானம் காலம் கடந்தே,
நகர்ந்தே செல்லுதே.
6 எல்லையில்லா எம் ஆண்டவா,
வெறும் புழுக்கள் யாம்,
படைப்புக்கள் எல்லோருமாய்
உம்மை போற்றுகின்றோம்.
Text Information | |
---|---|
First Line: | எல்லையில்லா எம் ஆண்டவா |
Title: | எல்லையில்லா எம் ஆண்டவா |
English Title: | Great God, how infinite art thou |
Author: | Isaac Watts |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [எல்லையில்லா எம் ஆண்டவா] |
Composer: | William Croft |
Key: | C Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |