1 ஆனந்தமாய் ஸ்தோத்தரிப்போம்,
வல்ல அன்பின் ஆண்டவா,
மலர் போலே எங்கள் மனம்
உம் முன்னே மலர்ந்ததே,
எங்கள் துக்கம் பாவமகற்றும்,
அவிசுவாசம் நீக்குமே,
நித்யானந்தம் தருவீரே
மெய் ஒளியால் நிரப்பும்.
2 மகிழ்சியாய் உம்மை சூழ்ந்தே
மண்ணும் விண்ணும் வாழ்த்துதே,
போற்றும் வானோர் விண்மீன் கூட்டம்
துதிகளில் உம் வாசம்,
வயல்வெளி காடு மலைகள்
பள்ளத்தாக்கு கடலலையும்
பூவும் குயிலும் பாயும் நீர்வீழ்ச்சி
அழைக்கிறதானந்திக்க.
3 நீரே எல்லாம் தந்து மன்னித்தீர்
ஆசீர்வாதம் ஆசி நீர்,
ஜீவ ஊற்றும் வாழ்வின் இன்பம்
ஆழ்கடல் மகிழ் ஓய்வும்,
நீரே தந்தை சகோதரர்
அன்பில் வாழும் எல்லாமே,
அனைவரையும் யாம் நேசிக்க
நித்தய மகிழ்சியில் சேர்த்திடும்.
4 மாந்தரே நாம் கூடிஅர்ப்பரிப்போம்
விண்மீன் பாடல் தொடர்ந்திட,
எங்கள் தந்தை உந்தன் அன்பு
ஒன்றாய் எம்மை இணைக்குமே,
பாடி போற்றி முன் செல்வோமே
வெற்றி தாரும் குழப்பத்திலே,
ஆனந்த தொனிதான்
உம்மிடம் நடத்தும்
வாழ்வின் வெற்றி பாடலே.