15543 | The Cyber Hymnal#15544 | 15545 |
Text: | அழிவோரை காப்போம் |
Author: | Fanny Crosby |
Translator: | S. John Barathi |
Tune: | [அழிவோரை காப்போம்] |
Composer: | William Howard Doane |
Media: | MIDI file |
1 அழிவோரை காப்போம்,
மரிப்போரை மீட்போம்,
பாவத்தில் சிக்கியே பாதாளம் வீழ்ந்தார்,
கண்ணீரோடே அணைத்தே,
தூக்கியெடுத்தே, ஆண்டவர் இயேசுவின்
வல்லமையை சொல்வோம்.
பல்லவி:
அழிவோரை காப்போம்
மரிப்போரை மீட்போம்,
இயேசு தயாபரர், மீட்க வல்லோர்.
2 கடின மனதுடன்
தூரச்சென்றிடினும்
பொறுமையாய் இருந்தவர்
சேர்த்தணைப்பாரே,காத்து நிற்கின்றார்,
அன்பாய் அழைத்தே,
மன்னித்தே மீட்பார் நம்பினோரை. [பல்லவி]
3 சாத்தானின் பிடியால்
நொருங்குண்ட மனதில்
புதைந்த நற்செயல்களை
மீண்டும் ம(அ)ருள்வார்,
அன்புடன் கரம் நீட்டி தொட்டு
அருள் கனிவுடன்
அறுந்த நரம்பினை இசைக்கச்செய்வார். [பல்லவி]
4 அழிவோரை காப்போம்,
கடமையை உணர்வோம்,
வல்லமையின் தேவன் பெலனளிப்பாரே,
குறுகிய வழிதான் பொறுமையாய் ஜெயிக்க
கர்த்தர் உயிர் தந்தார் நமக்கென்று சொல்வோம். [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | அழிவோரை காப்போம் |
Title: | அழிவோரை காப்போம் |
English Title: | Rescue the perishing, care for the dying |
Author: | Fanny Crosby |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | அழிவோரை காப்போம் |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [அழிவோரை காப்போம்] |
Composer: | William Howard Doane |
Key: | B♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |