Go Ad-Free
If you regularly use Hymnary.org, you might benefit from eliminating ads. Consider buying a Hymnary Pro subscription.
15542 | The Cyber Hymnal#15543 | 15544 |
Text: | அழிந்தேபோமோ மானுடம்? |
Author: | Philip Doddridge |
Translator: | S. John Barathi |
Tune: | ST. AGNES |
Composer: | John Bacchus Dykes |
Media: | MIDI file |
1 அழிந்தேபோமோ மானுடம்?
எரியும் புல்லைப்போல்,
சுற்றும் முற்றும் பரவினும்
தயவாய் காக்கிறார்.
2 இன்னமும் காப்பேன் காத்திடுவேன்,
பாவத்தால் கோபமே,
என் பொறுமை இன்னும் உண்டு
மீட்டிடுவேன் காப்பேன்.
3 இக்கருணை யார் போற்றுவார்,
மனதுருக்கமும்,
நொந்துள்ளோர்க்கு யார் சொன்னாரோ?
உம் முகம் நோக்கவே.
4 இப்படியான நாட்களில்,
வந்தும்பாதம் வீழ்ந்து,
மீண்டும் உம்மை கோபமூட்ட,
செல்வோம் பாவ வாழ்க்கை.
5 தூரே சென்றோம் யாம் விலகியே,
ஆண்டவர் அன்பினின்று,
எஞ்சியுள்ள நாம் பயந்தே
சோர்வால் அயர்ந்தோமே.
6 கண்டிக்கப்பட்டே மீட்க்கப்பட்டு,
உம் கரம் விட்டகன்றே,
இத்தீயில் யாமும் வீழ்வோமோ?
மாண்டே அழிவோமோ?
7 அழியும் அவ்வெளிச்சத்தால்,
மற்றோர் அறிவோமே,
உம் தீர்ப்பின் மா அகோரமே,
கண்டவர் உணர்வார்.
8 நீர் கேளும் பாவியாம் எம் ஓலம்,
உம் செவி சாய்த்திடும்,
பெலவீனரின் குரலே,
மனதுருகியே.
9 உம் தூய ஸ்வாசம் ஊதியே,
நல் ஒளி ஏற்றிடும்,
காப்பாற்றப்பட்டவராலே நீர்,
மகிமை கொள்வீரே.
Text Information | |
---|---|
First Line: | அழிந்தேபோமோ மானுடம்? |
Title: | அழிந்தேபோமோ மானுடம்? |
English Title: | Our nation seemed to ruin doomed |
Author: | Philip Doddridge |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | ST. AGNES |
Composer: | John Bacchus Dykes |
Meter: | C.M. |
Key: | G Major or modal |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | ![]() |
MIDI file: | ![]() |
Noteworthy Composer score: | ![]() |