1 யாம் உம்மை வாழ்த்தி போற்றிடுவோம்,
நீர் தந்த மெய் சமாதானம்,
நல் காலை தோன்றும் பகல் ஒளி
உம்மை நம்பியே வாழ்வோர்க்கு.
2 அப்பா யாம் வேண்டோம் நிம்மதி,
ஆனால் மெய் சாந்தமே ஆம்,
எம் வாழ்வின் சோர்வு
வேதனை சுமப்போம் எம் உள்ளத்தில்.
3 பராக்கிரமத்தின் வல்லமையால்,
யாம் தாங்கி சகிப்போமே ஆம்,
கண் காணா சோதனை ஊடே
முடிவில் சேர்வோம் உம்மோடே யாம்.
4 மெய் சாந்தமாக ஆழியில் பாயும்
ஊற்றைப்போலவே ஆம்,
யாம் என்றும் செழிப்பாய்
ஊற்றின் ஓரம் உம் ஒளி கொண்டோராய்.
5 ஆம் தாரும் மெய் சமாதானமே,
எவ்வாரே வாழ்வு போமோ?
எம் வாழ்வின் காலங்கள்
பூர்த்தியானதும் உம்முடன் ஏகுவோம்.
Source: The Cyber Hymnal #15828