1 நீர் என் சொந்தம் இயேசுவே
நான் உம்மை நேசிக்கிறேன்,
என்பாவ சிற்றின்பம் நான் வெறுத்திடுவேன்,
என் மீட்பரே தயவுள்ள இரட்சகரும் நீரே,
நான் நேசிப்பேன் உம்மையே
இப்போதும், எப்போதும்.
2 நான் நேசிக்குமுன்பே நீர் நேசித்தீரே,
சிலுவையில் மாண்டே மன்னிப்பீந்தீரே
முள் கிரீடம் எனக்காக, அணிந்தீர் என் ஸ்வாமி
நான் நேசிப்பேன் உம்மையே
இப்போதும் எப்போதும்.
3 நான் வாழ்ந்தாலும் நேசிப்பேன்
நான் மாண்டு போனாலும்,
என் சுவாசம் நீர் தரும்வரை உம்மை நேசிப்பேன்,
என் கண் மூடி சாக நான் காத்திருக்கும் போதும்
நான் நேசிப்பேன் உம்மையே
இப்போதும் எப்போதும்.
4 வான் வீட்டில் என்றும், மகிமை பேரின்பமே,
நான் அங்கும் நின்றும்மை, ஒளியில் துதிப்பேன்,
நல் ஜீவ கிரீடம் சூடி ஆனந்தித்தே பாடி
நான் நேசிப்பேன் உம்மையே
இப்போதும் எப்போதும்.
Source: The Cyber Hymnal #15655