1 மரி அன்னையுடன் யோசேப்பு தாவீதின் ஊருக்கு,
பிரயாணத்தாலே சோர்ந்தும் தங்க இடமில்லை,
தேடியும் இடமில்லை, அங்கிங்கும் அலைந்தும்,
இடமில்லை, இடமில்லை, ஓர் தொழுவம் வந்தார்.
2 ஒரு மாளிகையும் தாங்காது, எவ்வண்ண ஆடையும்,
வான் ராஜன் மண்ணில் பிறந்தார் இவ்வேழைக்கோலமாய்,
நம் மீட்பர் இவர்தானே, கந்தைக்கோலம் கொண்டு,
இக்குழந்தையின் தியாகமே, மண்ணோரை மீட்டிடும்.
3 நல் மேய்ப்பர் மந்தை காத்திட்டு அயர்ந்தே தூங்கையில்,
மீட்பர் பிறந்த செய்தி அங்கே ஒலித்தது,
அஞ்சாதீர்கள் நற்செய்தி சொல்ல நான் வந்தேனே,
என்று கூறியும் மேய்ப்பரும், பயந்து நடுங்க.
4 அஞ்சாமல் நீங்கள் கேளுங்கள் உங்களுக்காகவே,
தாவீதின் ஊரில் இன்றிரா பிறந்தார் மீட்பரே,
நம்மை மீட்க தன் சொந்த குமாரனைத்தந்து,
இவ்வளவாக நேசித்து நம்மை இரட்சிக்கவே.
5 அம்மேய்ப்பர் கண்ட காட்சியால் பயந்து வியக்க,
வான் தூதர் சேனை தோன்றியே நற்செய்தி பாடினர்,
ஆ உன்னதத்தில் தேவனுக்கு மகிமையே,
பூமியில் மெய் சமாதானம், மாந்தர் மேல் பிரியம்.
6 மெய் வாஞ்சையோடு ஆவலாய் பெத்லேகேம் அடைந்து,
கந்தை பொதிந்த கோலமாய் அப்பாலனைக்கண்டார்,
அவர்போல் நாமும் சென்று அப்பாலனை காண்போம்,
நம் இரட்சிப்புக்காய் வந்தாரே, தன் ஜீவனைத்தந்து.
Source: The Cyber Hymnal #15795