1 காத்திரு என் உள்ளமே,
ஆண்டவர் வாக்கை நம்பியே,
மாறா வார்த்தை என்றுமே,
வாழ் நாள் காக்கும் வல்லமை,
வாழ்நாள் காக்கும் வல்லமை.
2 சோதனையின் நாட்களில்,
எவ்விதமாய் தோன்றினும்,
வாக்கு தந்தார் காத்திட,
வாழ் நாள் காக்கும் வல்லமை,
வாழ்நாள் காக்கும் வல்லமை.
3 வேதனையால் வியாகுலம்,
மேலும் மேலும் வந்தாலும்,
இன்ப ஆருதல் வரும்,
வாழ் நாள் காக்கும் வல்லமை,
வாழ்நாள் காக்கும் வல்லமை.
4 காலா காலம் திண்ணமாய்
உந்தன் வாக்கு ஈவாமே,
மாறாதென்றும் உண்மையாய்,
வாழ் நாள் காக்கும் வல்லமை,
வாழ்நாள் காக்கும் வல்லமை.
Source: The Cyber Hymnal #15698