1 என் ஆத்மமே, வேதனை சோர்வோ?
பார் இருளில் ஒளியில்லை, இல்லை,
பார் இயேசுவை ஒளி நீ காண்பாய்,
உன் வாழ்வும் முழுமையாகும்,
பல்லவி:
பார் நீ இயேசுவை நோக்கி,
அவர் மகிமை முகத்தைப்பார் நீ,
இவ்வுலகம் மங்கியே போகும்,
அவர் கிருபையே பிரகாசிக்க.
2 நாம் மரித்து அடைவோம் மறுமையே,
அவர் முன் சென்றார் நாம் அவர் பின்செல்வோம்.
இனி மரணம் வெல்லாது நம்மை
நாம் வென்றோம் இயேசுவினாலே, [பல்லவி]
3 அவர் வாக்கு என்றுமே மாறாது,
நாம் நம்பினால் எல்லாமே நேர்த்தியாம்,
நீ சாகும் இவ்வுலகில் சென்று,
நல் மீட்பின் நற்செய்தி சொல்லு, [பல்லவி]
Source: The Cyber Hymnal #15599