1 அனாதி தேவா உம் வாக்கு
கிறிஸ்தேசுவுக்கே மகிமை,
தம் இரத்தம் சிந்தி மீட்டாரே,
இன்றென்றும் ஆள்வார் இராஜனாய்.
2 உம் செங்கோல் ஆள வேண்டியே
காத்து நின்றோம் யாம் மீட்பரே,
எங்கும் வெற்றியின் காட்சியே,
காலம் கடந்து சென்றதே.
3 எதிராய் சாத்தான் கூட்டமே
சிலுவை பார் ஆம் போர் ஓசை,
இருளின் தூண்கள் நெருங்க,
கால் தவறியே மாள்வாரே.
4 மலைகள் மீதே ஒளிர்ந்து
நல் பாதை காட்டி நடத்தும்,
எதிரொலிக்கும் குரல்கள்,
ஆனந்த சப்தம் கேட்குதே.
5 விஸ்வாசம் சபை நிறப்பும்
வல்மையால் கண்ணீர் ஓய்ந்திட,
தேசங்கள் யாவும் விறைந்தே,
அமைதி விடுதலைக்காய்.
6 தூயாவி வந்தே காண்பியும்
தந்தையின் சித்தம் வல்லமை,
நரகை வையம் வென்றிட,
இறுதியாய் கொண்டாடிட.
Source: The Cyber Hymnal #15546