1 ஆம் கிறிஸ்மஸ் நாளின் காலை,
நம் ஆலயத்தின் மணி,
சிறாரின் ஆனந்தப்பாடல்,
ஆ இன்பமாய்த்தொனிக்குதே,
பல்லவி:
டிங் டாங் தொனித்திடுதே,
டிங் டாங் நல் மணி
ஆலய மணி நீ நீ தொனி
ஆனந்த பாடல் தூதர் பாடிட,
பூமியில் சமாதானம்.
2 ஓர் தாயின் வார்த்தை கேட்டேன்
முதிர்ந்து மெலிந்தோய்ந்த,
ஓர் வேண்டுதலும் அங்கேதான்,
முழங்காலின் ஊன்றி நின்றே, [பல்லவி]
3 ஆ ஓய்ந்ததே புயலும்,
நின்றோய்ந்த பனி சாரல்,
அம்மாமலையின் அருவி,
ஆழ் தூக்கமும் நல் கனாவும், [பல்லவி]
4 இந் நாளின் வேலை ஓய்ந்தே,
முடிவின் நேரம் இதோ,
நம் இயேசு ராஜா பிறந்தார்,
எல்லோரும் சேர்ந்தே பாடுவோம். [பல்லவி]
Source: The Cyber Hymnal #15712