1 ஆ வானிலே புன்னகைத்தே,
கடல் மேல் உலவும் நீர்,
மீண்டும் மகிழ்ந்தே யாம் வந்தோம்,
எம் பாரம் தாங்காமல்.
2 எண்ணில்லா ஓசை ஊடே யாம்,
ஓய உம் அமைதியில்,
காற்றும் அலையும் ஒன்றாக,
சேர்ந்திசை பாடுதே.
3 உழைத்தே ஓய்ந்தோர் போலவே,
ஓய யாம் ஏங்கியே,
வாழ்வின் சோதனை ஏக்கங்கள்,
உம் அண்டை தீரவே.
4 வீணாய் சிதரும் சிந்தனை
பயங்கள் போக்குமே,
ஆராய்ந்து களைந்து நீக்குமே,
எம் கவலை பாவமும்.
5 கடல் மேல் ஒளிரும் சூர்யன் போல்,
அமைதி விண்மீன் போல்,
ஒளிர்ந்தெம்மேல் நீர் வீசிடும,
உம் அன்பின் ஜோதியாய்
Source: The Cyber Hymnal #15547