1 ஆ இன்பம் பொங்கிடும் பூஞ்சோலையிலே,
தம் பிள்ளைகளை நடத்தி, அமர்
தண்ணீரண்டை விடுவாரவரே,
தம் பிள்ளைகளை அவரே,
பல்லவி:
நீரண்டை சிலர் புயலிலும், எல்லோரையும்
அவர் தம் இரத்தத்தால், துக்கத்தினூடேயும்
பாடல் தந்து இராவிலும் பகலும் என்நேரமும்.
2 பிரகாசமான மலை மேலானாலும்,
தம் பிள்ளைகளை நடத்தி, பள்ளத்
தாக்கின் இருள் வழியாயினுமே,
தம் பிள்ளைகளை அவரே, [பல்லவி]
3 நம் வேதனையின் மன சோர்விலுமே,
தம் பிள்ளைகளை நடத்தி, அவர்
கிருபையாலே வெல்லவே சத்ருவை,
தம் பிள்ளைகளை அவரே, [பல்லவி]
4 ஆம் தூசியினின்றும் மண்ணினின்றும்,
தம் பிள்ளைகளை நடத்தி, நம்மை
பேரானந்த நித்ய வாழ்வை நோக்கி,
தம் பிள்ளைகளை அவரே, [பல்லவி]
Source: The Cyber Hymnal #15688