Author: S. John Barathi Appears in 1 hymnal Lyrics: 1 ஆண்டவரே என் ஜெபம் கேளும்,
நான் கண்ணீர் சிந்தியே
உம்மிடம் வந்தேன்,
உம் முகம் நீர் மறைக்காமலே,
நீர் என் வேண்டல்
கேட்டே பதில் தாரும்.
துன்பம் என்னை
தீயைப்போல் சுட்டெரித்தாலுமே,
என் நாட்கள் புகைப்போலவே
மறைந்தே சென்றாலும்,
நீர் போதுமே, நீர் போதுமே,
என் ஜெபமே நீர் கேட்டருளும்.
2 புல்லைப்போலே நான் உதிர்ந்தேனே,
நான் உண்ணவும் மறந்தே
மெய் சோர்ந்தேனே,
வேதனையில் தனியனாக,
நான் துக்கத்தால்
கண்மூடா நொந்தேனே,
என் சத்ருக்கள் தினம்தோரும்
என்னை அண்டியே,
என் கண்ணீர் என் தாகம் தீர்க்க
என் துக்கம் அப்பமே,உம் கோபமே,
உலர் இதழ்,என் வாழ்நாள் தான்
காய்ந்த இலை போலே.
3 ஆண்டவரே நீர் என்றும் ஆள்கிறீர்,
தெய்வாசனம்தான்
என்றேன்றும் நிச்சயம்,
எம் சந்ததி உம்மை வணங்க,
உம் நாமமே என்றும் நிலைக்குமே,
சீயோனில் தோன்றியே
உந்தன் அன்பின் மூலமாய்,
நீர் குறித்த நாளிலன்றோ?
உம் கிருபை ஈந்திடும், உம் தயவும்,
உம் அன்பாலே, உம் கிருபையை
நீர் பொழிந்திடும்.
4 எங்கள் ஜெபம் நீர் ஏற்றுக்கொள்ளும்,
சீயோன் மீது அன்புள்ளோர் நாங்களே,
வேதனை துன்பமும் தாங்கியே,
தன் இடிந்த இடிபாடினூடே,
உம் வல்லமை தோன்றி
எம்மை காத்து மீட்டிட,
சீயோனை மீண்டும் கட்டி
காத்து எழும்பிடவே,
இப்பூமியின் இராஜாக்களும்,
வணங்கியே வாழ்த்தி போற்றவே.
5 தெய்வாசனம் நீர் வீற்றிருந்தே,
குனிந்தே எம்மை தயவாய் காண்கிறீர்,
எம் புலம்பல் நீரே தீர்க்கவே,
அழிந்தே யாம் போகாமல் காக்கின்றீர்,
சீயோனிலே எல்லோருமே
ஒன்றாய் சேர்ந்தே,
தேசங்களும் இராஜாக்களும்
உன்தன் நாமத்தையே,
ஆம் வாழ்த்தவே, ஆம் உம்மையே,
ஆண்டவரே நீர் எம் தேவனே. Used With Tune: SAGINA Text Sources: The Psalter (Pittsburgh: United Presbyterian Board of Publication, 1912)h
ஆண்டவரே என் ஜெபம் கேளும்