15830. வந்தோம் வந்தோம் யாம் எல்லோரும்

1 வந்தோம் வந்தோம் யாம் எல்லோரும் வல்ல நாதா உம் இல்லம்,
உந்தன் ஞான வார்த்தை கேட்க, கேட்டு பற்றி நடக்க,
தாழ்மையாய் கடமை கற்றே வீழ்ந்தும் பாதம் அடைந்தே,
உம் மகிமைப்பேரொளிதான் சூழ்ந்த உந்தன் ஆசனம்.

2 கீதம் பாடி வாழ்த்திப்போற்றி உந்தன் அன்பின் ஈவிதே,
பாய்ந்தே பொங்கி ஓடி எங்கும் மா பெரிய கடல் போல்,
எங்கள் உள்ளம் மகிழ் கொண்டே நாங்கள் பாடி போற்றவே,
அல்லேலுயா அல்லேலுயா எங்கட் காய் பலியானீர்.

3 வேண்டி ஜெபித்து மன்றாடி உந்தன் ஆவி புறாபோல்,
வந்திறங்கி எங்கள் மீதே கிருபையின் கரமன்றோ?
உம்மை கெஞ்சி வேண்டி நின்றோம் பாதுகாத்தருள்வீரே,
எங்கள் கரம் விரைவாக எங்கள் உள்ளம் உமதாய். ஆமேன்

Text Information
First Line: வந்தோம் வந்தோம் யாம் எல்லோரும் வல்ல நாதா உம் இல்லம்
Title: வந்தோம் வந்தோம் யாம் எல்லோரும்
English Title: Coming, coming, we are coming
Author: Fanny Crosby
Translator: S. John Barathi
Meter: 87 87 D
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: CONVERSE
Composer: Charles C. Converse
Meter: 87 87
Key: F Major or modal
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.