15813 | The Cyber Hymnal#15814 | 15815 |
Text: | முன்னே செல்வோம் வாரீர் |
Author: | Sabine Baring-Gould |
Translator: | S. John Barathi |
Tune: | [முன்னே செல்வோம் வாரீர், போர் முனை செல்வதுபோல்] |
Composer: | Arthur Sullivan |
Media: | MIDI file |
1 முன்னே செல்வோம் வாரீர், போர் முனை செல்வதுபோல்,
சிலுவை கொடி ஏந்தி,பின்னே நாம் செல்வோம்.
இயேசு நம் தலைவர், முன்னே செல்கிறார்,
நாமும் பின்னே செல்வோம்,சிலுவைக்கொடி பின்னே,
பல்லவி:
முன்னே செல்வோம் வாரீர்
போர் முனை செல்வதுபோல்
இயேசு நம் தலைவர்
நாம் பின் செல்வோமே.
2 அவர் நாமம் சொல்ல, சாத்தான் ஓடுவான்,
வாரும் நீரும் வீரர், வெற்றி நோக்கியே,
நரகத்தின் தூண்கள், அதிரும் படியே,
போற்றும் துதி ஓசை, அதிர செய்திட, [பல்லவி]
3 வல்ல சேனை போல செல்லும் சபையே,
முன்னே சென்றார் தூயோர், நாம் பின் செல்கின்றோம்,
ஒன்றே நாம் எல்லோரும், ஓர் சரீரமே,
ஓர் விஸ்வாசம் ஓர் நம்பிக்கை, ஒன்றே சேவையாம், [பல்லவி]
4 சிம்மாசனம் கிரீடம் இராட்ஜியம் ஒழியும்
ஆனால் கிறிஸ்து ஆட்சி, என்றும் நிலைக்கும்
நரகத்தின் வாசல், சபையை அசைக்காதே,
நமக்குண்டு கிறிஸ்து வாக்கு என்றும் மாறாதே. [பல்லவி]
5 வாரும் நீங்கள் யாவரும் திரள் கூட்டமாய்,
ஆனந்தமாய் பாடி, சேர்ந்து துதிக்க,
துதி கனம் மகிமை, கிறிஸ்து ராஜர்கே,
தூதர் மாந்தர் கீதம் காலா காலமாய். [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | முன்னே செல்வோம் வாரீர், போர் முனை செல்வதுபோல் |
Title: | முன்னே செல்வோம் வாரீர் |
English Title: | Onward, Christian soldiers |
Author: | Sabine Baring-Gould |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | முன்னே செல்வோம் வாரீர் |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [முன்னே செல்வோம் வாரீர், போர் முனை செல்வதுபோல்] |
Composer: | Arthur Sullivan |
Meter: | 65.65.65 |
Key: | E♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |