15729 | The Cyber Hymnal#15730 | 15731 |
Text: | தம் மென்மையாலே தேடி |
Author: | W. Spencer Walton |
Translator: | S. John Barathi |
Tune: | [தம் மென்மையாலே தேடி] |
Composer: | A. J. Gordon |
Media: | MIDI file |
1 தம் மென்மையாலே தேடி,
என் பாவம் நோயும் தீர்க்க,
தன் தோளின்மீது தாங்கி
தம் மந்தை சேர்த்தாரே,
விண்தூதர் பண் இசைக்கவே,
வான் ஓசை கேட்கும் நேரமே,
பல்லவி:
என்னை ஏற்ற அன்பு, இரத்தத்தாலே மீட்டு,
மீண்டும் என்னை மந்தை சேர்த்ததே,
என்னை மீண்டும் மந்தை சேர்த்ததே.
2 என் காயத்தோடே கண்டார்,
நல் எண்ணை இரசம் வார்த்தார்,
என் காதில் மெல்ல சொன்னார்,
நீ எந்தன் சொந்தமே,
நான் எங்கும் கேளா இன்பமே,
என் துன்பம் யாவும் நீங்கிற்றே, [பல்லவி]
3 கூர் ஆணி காயம் காட்டி,
தம் சொந்த இரத்தம் சிந்தி,
முள் கிரீடம் ஈன சின்னம்,
என் பாவம் போக்கவே,
நான் பாவியாயிருந்துமே,
மா வேதனை எனக்காக, [பல்லவி]
4 அச்சன்னதியில் சேர்ந்தேன்,
பிரகாசமாக தோன்ற,
மா விந்தை காட்சியாலே,
மெய் ஆசீர் உணர்ந்தேன்,
ஆ நித்யகாலம் போலவே,
போதாது காலம் போற்றிட, [பல்லவி]
5 இக்காலம் செல்ல செல்ல,
எல்லாம் இப்போது ஓய்ந்து,
நல் காலைக்காய் நான் சாய்ந்து,
பிரகாசம் வேண்டியே,
அவர் நம்மை அழைப்பாரே,
தம்மோடு என்றும் தங்கிட, [பல்லவி]
Text Information | |
---|---|
First Line: | தம் மென்மையாலே தேடி |
Title: | தம் மென்மையாலே தேடி |
English Title: | In Tenderness He Sought Me |
Author: | W. Spencer Walton |
Translator: | S. John Barathi |
Refrain First Line: | என்னை ஏற்ற அன்பு, இரத்தத்தாலே மீட்டு |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [தம் மென்மையாலே தேடி] |
Composer: | A. J. Gordon |
Key: | A Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |