15632. உம்மில் என் உள்ளம் ஓய்ந்தே காத்து நிற்கிறதே,

1 உம்மில் என் உள்ளம் ஓய்ந்தே காத்து நிற்கிறதே,
வேறென் செய்வேன் நான் பாவி, தேவாதி தேவனே,
உம் ஒளி எந்தன் ஞானம், உம் அன்பில் நிலைப்பேன்,
ஆம் ஆண்டவா உம் வீடே நெருங்குதென்னாளும்.

2 என் பாவம் குற்றம் அதிகம் உம் கிருபை பெரிதே,
ஓர் பாவம் செய்யா நீரே, மாண்டீரெனக்காக,
உம்மோடு ஈடில்லாமல், மண்ணின்று மீண்டேனே,
உம் இரத்தம் எந்தன் பொக்கிஷம் உம் வாக்கென்னம்பிக்கை.

3 என் மூலமே என் ஆண்டவா உம் சித்தம் செய்யுமே,
அர்ப்பணித்தேன் என்னை முற்றும் நான் பெலவீனனே,
நான் ஆற்றல் அற்றோனாயிருந்தும், வரியோனாயிருந்தும்,
நான் செல்வந்தன் தான் உமது ஐஸ்வர்யத்தால்தானே.

4 இருளின் மேகம் சூழ்ந்தாலும் என்னோடிருக்கிறீர்,
என் அவிஸ்வாசம் நீக்கி, ஆன்மாவை தேற்றுவீர்,
உம் மார்பில் சாய்ந்தே நானும், உம் முகம் காண்பேனே,
பகைஞர் என்னை வீணே கூடாமல் தள்ளினும்.

5 நீர் தந்ததே என் ஆனந்தம் விடுதலையுமே,
வேரே யாரை புகழுவேன், உம்மையன்றி நானே,
உலகின் ஆஸ்தி நீரூற்றும் இல்லாதேயொழிந்தும்,
உம் கிருபை என்னில் தங்கும் நான் வாழ்ந்து சாமட்டும்.

ஆமேன்.

Text Information
First Line: உம்மில் என் உள்ளம் ஓய்ந்தே காத்து நிற்கிறதே,
Title: உம்மில் என் உள்ளம் ஓய்ந்தே காத்து நிற்கிறதே,
English Title: On Thee my heart is resting
Author: Theodore Monod
Translator (English): Anonymous
Translator (Tamil): S. John Barathi
Meter: 76.76 D
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: ELLACOMBE
Meter: 76.76 D
Key: A Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.