Go Ad-Free
If you regularly use Hymnary.org, you might benefit from eliminating ads. Consider buying a Hymnary Pro subscription.
15623 | The Cyber Hymnal#15624 | 15625 |
Text: | ஈடில்லாத தூய அன்பே |
Author: | Charles Wesley |
Tune: | BEECHER |
Composer: | John Zundel |
Media: | MIDI file |
1 ஈடில்லாத தூய அன்பே,
விண் பேரின்பம் பூவிலே,
எம்மை உந்தன் விந்தை வாசம்
வைத்து கிருபையால் சூடும்.
மா தயாபரர் நீர் ஸ்வாமி
உம் அன்பிற்களவேது?
இரட்சிப்பினால் எம்மை காத்து
வாரும் எம் அஞ்சும் நெஞ்சில்.
2 ஊதும் உமதன்பின் ஆவி
நொந்த எங்கள் நெஞ்சிலே,
உம்மாலே யாம் ஏற்போம்
எங்கள் நிம்மதியின் நிச்சயம்.
பாவம் செய்யும் சுவாபம் நீக்கும்
நீரே அல்பா ஒமேகா,
போக்கும் எமதவ்விஸ்வாசம்
எங்கள் உள்ளம் மீண்டிடும்.
3 எல்லாம் வல்லோரே நீர் வாரும்
யாம் உம் வாழ்வை பெற்றிட,
வேகம் உமதாலையமே
வந்தே மீண்டும் ஏகாமல்,
உம்மை என்றும் போற்றி வாழ்த்தி
சேவை செய்தே மேலோர் போல்,
வேண்டி நின்றே புகழ் பாடி
ஆர்ப்பரிப்போம் உம் அன்பில்.
4 உம் படைப்பை கரை ஏற்றும்
யாம் எக்குற்றம் அற்றோராய்,
உம் இரட்சிப்பை கண்டே ஏற்று
முற்றும் மாற்றம் பெற்றோராய்.
மகிமை மேல் மகிமையால்
விண் வீடடையும் வரை,
எம் கிரீடம் உம் பாதம் வைப்போம்
வியந்தன்பை போற்றியே.
Text Information | |
---|---|
First Line: | ஈடில்லாத தூய அன்பே |
Title: | ஈடில்லாத தூய அன்பே |
English Title: | Love divine, all loves excelling |
Author: | Charles Wesley |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | BEECHER |
Composer: | John Zundel |
Meter: | 87.87 D |
Key: | B♭ Major |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |