15593. இப்பெலவீன தேகமே

1 இப்பெலவீன தேகமே,
விழுந்தே ஆம் சாகட்டும்,
இம்மாயமாம் என் தேகமே,
ஒழிந்தேகி போகட்டும்,
தூயோரோடு நான் தோன்றியே,
என் வாஞ்சைபோல் ஓய,
அதென்றோ? எந்தன் ஏக்கமே,
மீட்பரின் மார்பிலே.

2 விண்வாழ்வின் கிரீடம் சூடவே,
சிலுவை நான் பற்றினேன்,
இங்கும் அங்கும் நான் சென்றேகினும்,
துன்பமோ? அதின்பமோ?
பொருமையாய் எந்தன் காலமே
மீட்பர் வருமட்டும்,
இவ்வேழை கண்ணீர் போக்கியே,
தம் வீடே சேர்ந்திட.

3 கிறிஸ்தெனக்கன்பாய் ஈந்தாரே
என் கண்களெதிரே,
ஜீவாற்றின் தூய வாழ்வுதான்,
விண்லோக விருட்சமே,
என் கண்கள் காணும் பிரகாசம்
அவ்வின்பமும்தானே,
வெண்ணங்கியோடே தூய்மையாய்,
குருத்தோலையுடனே.

ஆமேன்.

Text Information
First Line: இப்பெலவீன தேகமே
Title: இப்பெலவீன தேகமே
English Title: And let this feeble body fail
Author: Charles Wesley
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: CLEANSING FOUNTAIN
Meter: CMD
Key: C Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.