15540. அருமை உம் கிரியை எம் இராஜனே

1 அருமை உம் கிரியை எம் இராஜனே,
உம் நாமம் போற்றி நன்றி செலுத்த,
காலையில் உம் அன்பை உணர்ந்து நாங்கள்
உண்மைகளை இராவில் பேச.

2 அற்புதம் இந்நாள் நீர் தரும் ஓய்வு,
இவ்வுலகின் துன்பம் ஒன்றும் செய்யா,
என் உள்ளம் இசைந்தே தொனித்திடவே,
தாவீதின் யாழ் கீதம் போல.

3 என் உள்ளில் ஆனந்த ஜெய தொனியே,
போற்றிடும் அவர் செயல் வல்லமையும்
எங்கெங்கும் ஜொலிக்குதே அவர் படைப்பு,
ஆழ்ந்த உம் ஞானம் திவ்யமே.

4 ஆண்டவரே எனக்கும் பங்குண்டோ?
என் உள்ளம் உம் கிருபையால் நிரம்ப,
இன்பமும் தயவும் பொங்கிடவே,
தூய தைலம் நான் ஆனந்திக்க.

5 பாவ சாபம் என் துரோகிகளே,
பாதகன் இனி என்னை அண்டாமலே,
என் உள்ளில் எழும் தீய வாஞ்சைகளும்,
சாத்தானும் என்னை தீண்டாமல்.

6 நான் கண்டு ஏற்று உணர்ந்திடவே,
என் வாஞ்சை பூமியில் மாயையன்றோ?
இங்கெல்லா பிரயாசமும் இன்பமாகும்,
ஆங்கே நாம் வாழ விழைந்திட்டால்.

7 மூடர் தம் சிந்தனை வானுயரம்,
பேதைகளாய் வாழ்ந்து மரித்து,
தோன்றியே புல்லைப்போலே பூண்டைப்போலே,
மாள்வார் மீளா மரண குழியில்

8 ஆ என்ன விந்தை நான் கொண்டாடிட,
உம் நாமம் என்றென்றும் போற்றிடவே
ஆனந்த ஸ்தலத்தில் நான் காண்பேனே,
உம் முகம் நேரில் தரிசிப்பேன்.

Text Information
First Line: அருமை உம் கிரியை எம் இராஜனே
Title: அருமை உம் கிரியை எம் இராஜனே
English Title: Sweet is the work, my God, my King
Author: Isaac Watts
Translator: S. John Barathi
Language: Tamil
Copyright: Public Domain
Tune Information
Name: [அருமை உம் கிரியை எம் இராஜனே]
Composer: John C. Hatton
Key: D Major
Copyright: Public Domain



Media
Adobe Acrobat image: PDF
MIDI file: MIDI
Noteworthy Composer score: Noteworthy Composer Score
More media are available on the tune authority page.

Suggestions or corrections? Contact us
It looks like you are using an ad-blocker. Ad revenue helps keep us running. Please consider white-listing Hymnary.org or getting Hymnary Pro to eliminate ads entirely and help support Hymnary.org.